#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவி, ரவுடி கள்ளக்காதலனை கொலை செய்ய ரவுடி கணவன் செய்த பகீர் காரியம்.. கூட்டாளியுடன் பரபரப்பு கைது.!
மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருக்கும் ரௌடியை கொலை செய்ய, ரௌடி கணவன் நாட்டு வெடிகுண்டு தயார் செய்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள துரைப்பாக்கம், கண்ணகி நகர் பகுதியை சார்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ண மூர்த்தி (வயது 32). கிச்சா அப்பகுதியில் ரௌடியாக வலம்வந்த நிலையில், துரைப்பாக்கம் மற்றும் கண்ணகிநகர் உட்பட பல காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை முயற்சி உட்பட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர், தன்னைப்பற்றி கண்ணகி நகர் காவல் துறையினருக்கு துப்பு கொடுத்ததாக சந்தியா என்ற பெண்ணை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் தனிப்படை காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், இவரது மனைவி கேளம்பாக்கத்தை அடுத்துள்ள மாம்பாக்கம் பகுதியை சார்ந்த நாய் சேகர் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த கிச்சா தனது மனைவி மற்றும் நாய் சேகரை கொலை செய்ய முயற்சிக்க பெருங்குடியில் உள்ள இல்லத்தில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். இதுதொடர்பான தகவல் காவல் துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கிச்சா, அவரது கூட்டாளிகள் ஜெகன் (வயது 22), பார்த்தீபன் (வயது 22), ராஜராஜன் (வயது 26) உட்பட 5 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ஆட்டோ, 2 இருசக்கர ஆவாகனம், 8 செல்போன்கள், 5 வீச்சரிவாள், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.