ஒரே பெண்ணை காதலித்த 2 இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்.!



chennai-two-boys-fall-in-love-with-same-girl-few-years-later

சென்னை முத்தாபுதுப்பேட்டை, தெலுங்கு காலனியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரை சிலர் கடந்த 15 ஆம் தேதி வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து பிரகாஷின் அம்மா முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

அதன்பின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிரகாஷை மிரட்டியது அவரது பள்ளி பருவ நண்பர் பிரவீன் ராஜூயும் அவரது நண்பர்களும் என தெரியவந்துள்ளது. அதனை அடுத்து போலீசார் பிரவீனையும் அவரது நண்பர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். 

அதில் பள்ளி பருவத்தின் போது பிரவீன் மற்றும் பிரகாஷ் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பள்ளி நிர்வாகம் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது. எனவே இருவரும் பள்ளி படிப்பை தொடர முடியாமல் கிடைத்த வேலை செய்து வந்துள்ளனர். 

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் பிரகாஷை, பிரவீன் சந்தித்த போதிலும் பழைய காதல் முன்விரோதத்தை மறக்காமல் பிரவீன் ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பிரகாஷை கத்தி முனையில் மிரட்டியிருக்கிறார்.