#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: பட்டப்பகலில் தனியார் அலுவலகத்தில் இளைஞர் படுகொலை.. சென்னையில் துணிகரம்... நடந்த பயங்கரம்.!
தன்னை வேலையில் இருந்து நிறுத்தியவரை ஊழியர் அலுவலகத்திற்குள் புகுந்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வியாசர்பாடி, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவேக் (வயது 28). இவரின் மனைவி தேவப்பிரியா. இவர்கள் தங்களின் குழந்தையுடன் அயனாவரத்தில் வசித்து வறுகின்றனர். விவேக் சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தேவப்பிரியா எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.
இன்று வழக்கம்போல தனது மனைவியை அவரின் அலுவலகத்தில் விட்டுவிட்டு பணியிடத்திற்கு விவேக் வருகை தந்துள்ளார். அங்கு ஏற்கனவே பணியில் இருந்து விவேக்கால் நிறுத்தப்பட்ட சந்தோஷ் என்ற வாலிபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது பேசிக்கொண்டு இருக்கையிலேயே சந்தோஷ் கத்தியை எடுத்து விவேக்கின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
சந்தோஷுடன் 5 பேர் கும்பல் சேர்ந்துகொண்டு விவேக்கை சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்து 5 பேர் கும்பல் தப்பி சென்றுள்ளது. விவேக் தன்னை காப்பாற்ற அலுவலகத்தின் மாடியில் இருந்து கீழே வரும் வழியில் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து காவல் துறையினர் வருகையை அறிந்த சந்தோஷ் கட்டிடத்தின் மாடிக்கு சென்று எதிர் கட்டிடத்திற்கு தாவி தப்பி சென்றுள்ளார்.
அவரை துரத்தி சென்ற அதிகாரிகள் மாற்று வழியில் சென்று சந்தோஷை கைது செய்தனர். அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உள்ளக்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த 5 பேர் கும்பலுக்கும் வலைவீசப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த துணை ஆணையர் விவேக்கின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தார்.