தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சரக்கடிக்கும் தகராறில் பெயிண்டர் ஒரே அடியில் நாக்கவுட் கொலை.. 20 வயது மனைவி கைக்குழந்தையுடன் கண்ணீர்.!
சென்னையில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர், பி.வி காலனி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (வயது 22). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். வெங்கடேஷின் மனைவி யஷ்வினி (வயது 20). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 1 வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்துகொண்டனர்.
தம்பதிகள் இருவருக்கும் 9 மாதமாகும் கைக்குழந்தை உள்ள நிலையில், இவர்கள் அனைவரும் செங்குன்றம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்கள். முன்னதாக காட்டூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் செங்குன்றத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கால்பந்து விளையாடுகையில் வெங்கடேஷ் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர், வெங்கடேஷின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, காட்டூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, சிராஜ் சிங், ஜீவா ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், சத்தியமூர்த்திக்கு பிறந்தநாள் என்பதால், காட்டூர் மின்வாரிய அலுவலகம் அருகே இருக்கும் மைதானத்தில் சத்தியமூர்த்தி, ஜீவா, வெங்கடேஷ், சிராஜ் சிங் ஆகியோர் ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ளனர்.
பின்னர், சிராஜ் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் ஜீவா, வெங்கடேஷ் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் மீண்டும் மதுவாங்கி வந்து குடித்துள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த சிராஜ், யஷ்வந்த் என்பவருடன் மீண்டும் மைதானத்திற்கு வந்து நண்பர்களுடன் என்னை விட்டு எதற்காக நீங்கள் மது அருந்துகிறீர்கள்? என தகராறு செய்துள்ளார்.
தகராறில் ஆத்திரமடைந்த யஷ்வந்த் ஜீவாவை தாக்க, அதனை வெங்கடேஷ் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் வெங்கடேஷின் மார்பில் யஷ்வந்த் பலமாக கைகளால் குத்த, நிலைதடுமாறி விழுந்த வெங்கடேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வாய் மற்றும் மூக்கு பகுதிகளில் இரத்தம் வழிந்துள்ளது.
அவரை மீட்ட நண்பர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெங்கடேஷ் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவர்களின் கண்களில் மண்ணைத்தூவி, மீண்டும் வெங்கடேஷை மைதானத்திற்கு கொண்டு வந்து அதிகாரிகளுக்கு போன் போட்டு நாடகமாடியதும் அம்பலமானது.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் யஷ்வந்த் மற்றும் சிராஜ் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.