பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர்.!
வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த புயல் கரையை கடப்பதற்கு முன்பே நேற்று அதிகாலையில் இருந்து சென்னையில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நிவர் புயல் கரையை கடப்பதற்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்தன. இந்த புயலானது புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்ததால், கடலூர் மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், கடலூரில் புயலால் பாதிக்கபட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், "நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம்.
அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை. புயல் வெள்ளத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயிரிழப்பை தவிர்க்க மழை நீர் முழுவதும் அகற்ரபட்ட பிறகே மின்சார வினியோகம் தொடங்கும் என தெரிவித்தார். முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள் என தெரிவித்தார்.