கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை..!



CM discussed about the controld of corona in All IPS officer

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்நோய் இந்தியாவிலும் மிக விரைவாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை கொரோனா தொற்றால் தமிழகத்தில் மட்டும் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

CM

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்தலாம் என மாவட்ட கலெக்டர்களுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசவுள்ளார். 

அதாவது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ளலாம் என்ற விரிவான ஆலோசனையை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.