14 வயது சிறுமியை மயக்கி ஊர்-ஊராக சுற்றுலா; 24 வயது இளைஞர் போக்ஸோவில் கைது.!



Coimbatore Mettupalaiyam Youngster Arrested by Pocso 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளார். அங்குள்ள எல்.எஸ் புரம் பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி விக்னேஷ் (வயது 24). பேருந்து நிறுத்தத்தில் விக்னேஷும் - சிறுமியும் அடிக்கடி பார்த்து நட்பை வளர்த்து இருக்கின்றனர்.  

இருவரும் நட்பாக பழகிவந்த நிலையில், விக்னேஷ் சிறுமியை காதல் வலையில் வீழ்த்த நினைத்துள்ளார். அதற்கு சிறுமி சம்மதம் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியை சந்தித்து எங்காவது நாம் சென்று வாழலாம் என ஆசையாக பேசி அழைத்துச்சென்ற நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பவில்லை.

தனது மகளை காணாது தவித்த பெற்றோர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் சிறுமி காதல் வயப்பட்ட விவகாரத்தை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இருவரும் எங்கு சென்றனர்? என்பது தெரியாமல் விசாரணை தாமதமானது. 

விக்னேஷின் செல்போன் நம்பரை வைத்து மேற்கொண்ட ஆய்வைதொடர்ந்து, திருப்பூரில் பதுங்கியிருந்த விக்னேஷை அதிகாரிகள் கைது செய்து சிறுமியை மீட்டனர்.

இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களை சுற்றி வந்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். விக்னேஷ் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.