பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உடை மாற்றும் பெண்கள்! அந்த இடத்தில் ரகசிய கேமிரா! கையும் களவுமாக சிக்கிய கோவை வாலிபர்!
கோயம்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய பகுதி ஒன்றில் இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் வேலைபார்க்கும் நபர் ஒருவர் அதே பங்கில் வேலைபார்க்கும் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் வேலைபார்க்கும் பெண்கள் பங்கிற்கு வந்ததும் சீருடை மாற்றுவது வழக்கம். அவர்கள் சீருடை மாற்றும் அறையில் அதே பங்கை சேர்ந்த நபர் ஒருவர் தினமும் பெண்கள் வருவதற்கு முன்னரே அறைக்குள் சென்று தனது தொலைபேசியில் வீடியோ கேமிராவை ஆன் செய்து வைப்பதும், அவர்கள் சென்ற பின் தொலைபேசியை எடுத்துக்கொள்வதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இதுபோன்று அந்த பங்கில் வேலை செய்யும் சுமார் 5 பெண்களின் உடை மாற்றும் வீடியோ அந்த நபரின் தொலைபேசியில் இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்றும் தனது வேலையை காட்டியுள்ளார் அந்த நபர். அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெண்கள் மறைந்திருந்து அவர் செய்வதை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.