பிராங்க் வீடியோ எடுத்தால் சேனல் முடக்கம் - காவல்துறை அதிரடி எச்சரிக்கை.. யூடியூபர்களே உஷார்.!



Coimbatore Police Warning about Prank Show Shoot YouTubers

மக்களை அச்சுறுத்தும் வகையில் தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக பிராங்க் வீடியோ எடுக்கும் யூடியூபர்கள் மீது வழக்குப்பதிந்து சேனல் முடக்கப்படும் என கோவை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

கோயம்புத்தூர் மாநகர காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், "கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் பொதுஇடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுக்க கூடாது. 

மாறாக யூடியூபர்கள் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தி பிராங்க் வீடியோ எடுக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களின் யூடியூப் தளமானது முடக்கப்படும்.

பிராங்க் விடியோக்கள் முற்றிலும் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானவையக இருக்கிறது. பிராங்க் பெயரில் மக்களை அச்சுறுத்தினால் அல்லது பிராங்க் வீடியோ எடுத்தால் காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், புகார் அளிக்கலாம்" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.