#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோவை to பெங்களூர்.. தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீ.. மரண பீதியில் முண்டியடித்து கீழே குதித்த பயணிகள்..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கோவையில் இருந்து பெங்களூர் சென்ற ஆம்னி பேருந்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையிலிருந்து பெங்களூருக்கு நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தானது புதுசாம்பள்ளி என்ற இடத்தில் வந்த போது பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பெருந்தை நிறுத்தியுள்ளார். இதற்கிடையில் தீயானது சில நொடிகளில் பேருந்தில் மளமளவென பரவியது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சமடைந்து ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு கீழே குதித்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாவிட்டாலும் 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த தீ விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் அதற்கான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.