"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#Breaking: பொங்கல் பரிசு ரூ.1000 ரத்து எதனால்? அமைச்சர் தங்கம் தென்னரசு பரபரப்பு பதில்.!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். தற்போது பொங்கல் 2025 பண்டிகை சிறப்பிக்கப்படவுள்ள நிலையில், அரசு சார்பில் கரும்பு உட்பட பரிசுத்தொகுப்பு வழங்கப்ட்டது. கடந்த காலங்களில் ரூ.1000 பணம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது வழங்கப்படவில்லை.
ரூ.780 கோடி ஒதுக்கீடு
இந்நிலையில், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து, பொங்கல் பரிசுடன் ரூ.1000 கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கான பதில் அளித்தார். பொங்கல் பரிசு தொகுப்புக்காக ரூ.780 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: இது ஜனநாயக படுகொலை.. இருட்டடிப்பு: எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.!
நிதிச் சுமையே காரணம்
புயல் நிவாரண பணிக்கு ரூ.37 ஆயிரம் மத்திய அரசிடம் கேட்ட நிலையில், ரூ.276 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ரூ.2700 கோடி வரை புயல் பாதிப்பு பணிகளுக்காக செலவு செய்துள்ளது. 2024 ல் ஏற்பட்ட பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியே, பொங்கல் பரிசு தொகை ரத்தானதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
2,20,94,585 ரேஷன் அட்டைகளுக்கு கிலோ பச்சரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை இதர பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: "மாணவிகளின் கல்வியை கெடுத்துறாதீங்க" - முதல்வர் முக ஸ்டாலின் கலங்கி, உருக்கமான பேச்சு.!