#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் அடிபட்டு பரிதாப பலி.. விபத்து ஏற்படுத்திய மாணவர் படுகாயம்..!!
சென்னையில் உள்ள காட்டாங்குளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தாமரைசெல்வி என்ற மாணவி எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவர் இன்று காலை கல்லூரி சாலையை கடக்கும் முயற்சித்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாகனஓட்டி அவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய கல்லூரி மாணவரான நுபுர் சர்மா (வயது 19) மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காட்டாங்குளத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.