குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஹாஸ்டலில் இருந்த கல்லூரி மாணவி திடீர் தற்கொலை.. அதிர்ச்சி காரணம்.! நெஞ்சை உலுக்கும் சோகம்.!!
சென்னையில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் படித்து வருபவர் பவித்ரா. இவர் D.Pharm நான்காம் ஆண்டு படித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா, ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கியுள்ளார். இந்நிலையில், திடீரென்று பவித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பல்லாவரம் காவல்துறையினர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக பவித்ராவின் உடலை அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், பவித்ரா தனது வாட்ஸ் அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், "தன்னால் படிக்க முடியவில்லை என்றும், எனக்கு நீங்கள் பணம் கட்டி மிகவும் கஷ்டப்படுகிறீர்கள். எனவே உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை. நான் அனைவரையும் விட்டு செல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.