#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.!
தமிழகம் முழுவதும் அதிகமாக கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நோயை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு ஏற்ப்படுத்தி வருகின்றனர்.
இந்நோயானது பாரபட்சம் இன்றி ஏழை மக்கள் முதல் பணக்காரர், பிரபலங்கள் என அனைத்து மக்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. இந்நோய்க்கு சில பிரபலங்கள் பலியாகியும் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.