#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பீதியை கிளப்பும் கொரோனா.. சென்னையில் மீண்டும் நிரம்பும் மருத்துவமனை படுக்கைகள்.. அதிர்ச்சியில் மக்கள்..
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் மீண்டும் நிரம்பத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக பதிவாகிவந்தநிலையில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தினமும் 400 கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தற்போது நகரில் மொத்தம் 2,985 பேர் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சென்னை ராஜீவ் காந்தி, கீழ்ப்பாக்கம், கிண்டி, ஸ்டான்லி, ஓமந்தூராா் என முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.