#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தென்னிந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலம் எது? தமிழகத்தின் மோசமான நிலை!
உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் அதிகரிப்பில் முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,296 ஆக உள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில்தான் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தமிழகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய ஆகிய மாநிலங்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இந்த ஐந்து மாநிலங்களில் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் கொரோணா பரவல் சற்று குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகப்படியாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.