மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று மேலும் 1,243 பேருக்கு கொரோனா பாதிப்பு.. தொடர் அதிகரிப்பால் அச்சத்தில் மக்கள்..



Corona latest count report in Tamil Nadu

தமிழகத்தில் இன்று மேலும் 1243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,65,693 ஆக அதிகரித்து உள்ளது.

corona

இன்று மட்டும் கொரோனா பாதித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் 3 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,590 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,291 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக பதிவாகிவந்தநிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.