பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நான் சிகிச்சை முடிந்து வெளியே வந்ததும் உன்னை வண்டி ஏத்தி கொல்லப்போறேன்.! கொரோனா நோயாளி விடுத்த ஆவேச கொலை மிரட்டல்..!
கோயம்பேட்டிலிருந்து ரகசியமாக திட்டக்குடி அருகே உள்ள அகரம் கிராமத்தில் 29 கொரோனா நோயாளிகள் பதுங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் பதுங்கி இருந்த கொரோனா நோயாளிகளை அக்கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலக அதிகாரி பஷீர் என்பவர் சுகாதார துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் அந்த 29 பேரையும் ஒரு பள்ளியில் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.
மற்ற நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேரில் அகரம் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் தனது பெயரை சுகாதார துறை அதிகாரிகளிடம் பஷீர் கூறியதால் ஆத்திரமடைந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மணிமாறனின் பெயரை பஷீர் சுகாதார துறையினரிடம் கூறியதால் ஆத்திரமடைந்த மணிமாறன், பஷீர் செல்போனுக்கு தொடர்பு கொண்டு என்னைக்கா இருந்தாலும் உன் உயிர் என் கைலதான். என் பேரு மணிமாறன்.. நீ இல்லனா, என் பேரை லிஸ்ட்ல எழுதிக் கொடுத்தது யாரு? நான் சிகிச்சை முடிந்து வெளியே வந்ததும் உன்ன வண்டி ஏத்தி கொல்லப் போறேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார் மணிமாறன்.
மேலும் இச்சம்பவம் குறித்து பஷீர், மணிமாறனின் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் மணிமாறன் கொரோனா நோயிலிருந்து குணமடைந்த பின்னர் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.