#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொடூரம்... மதுவிற்கு அடிமையான கணவனை கொலை செய்த மனைவி.! மகன் உட்பட 2 பேர் கைது.!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மகன்கள் மற்றும் தாய் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேவுள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு திருமணமாகி போதுமணி என்ற மனைவியும் சூர்யா மற்றும் சுகன் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில் பாலமுருகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரிகிறது. தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறு செய்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பாலமுருகனை கழுத்தை நெரித்து படுகொலை செய்து இருக்கிறார். இது சம்பவத்தில் அவரது மகன்களும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அவரது மனைவி போதுமணி மற்றும் மகன்கள் சூர்யா சுகன் ஆகியோரை கைது செய்திருக்கிறது. தந்தை தனது மனைவி மற்றும் பெற்ற மகன்களாலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.