#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சந்தேகத்தால் மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்; பிரிந்து வாழ்ந்தும் நடந்த பயங்கரம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, கோட்டிலாம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 28 வயது இளம்பெண்ணுக்கு, காட்பாடி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இளம்பெண் வாழ்வாதாரத்திற்காக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அங்கு உடன் பணியாற்றி வந்த நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், கணவரை தேடி வருகின்றனர். மேலும், 28 வயது இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.