பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உஷாரா இருங்க.. புயல் எச்சரிக்கை.. பிப் 3-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல தடை..!
புயல் எச்சரிக்கையால் வரும் 3-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "வங்ககடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மதியம் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக கடலில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலமான காற்று வீசகூடும் என்றும் குறிப்பிட்டிருந்தது. அத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் தென்மேற்கு வங்காளவிரிகுடா, கன்னியாகுமரி, மன்னர்வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதிவரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.