#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுத தந்தையும் மரணம்! சோக சம்பவம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் வெகு நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ராஜாங்கம் நேற்று கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் ராஜாங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராஜாங்கத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டதும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். வயதான நிலையில் ராஜாங்கத்தின் தந்தை ஆறுமுகம் மகனை இழந்த துக்கம் தாங்காமல் கதறி அழுதுள்ளார். இந்தநிலையில் ஆறுமுகத்திற்கு திடீரென மகன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் இறந்த தினத்திலேயே தந்தையும் உயிரிழந்தது அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.