#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தந்தை மீது அளவற்ற பாசம்... தந்தையின் நிலையை பார்த்து மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு.!
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ராமக்கண்ணன்-பிரியா. இவர்களது மகள் கிருத்திகா இவர் நம்பியூரை அடுத்த கெடாரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். ராமக்கண்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கிருத்திகா தேர்வு எழுதிவிட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தார். தந்தை ராமக்கண்ணன் மீது கிருத்திகாவுக்கு அதிக பாசம் இருந்து வந்துள்ளது. இதனிடையே ராமக்கண்ணன் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருத்திகா மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், தந்தை உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வருவதை பார்த்து மனவேதனை அடைந்த மாணவி கிருத்திகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுள்ளார். இதனைப்பார்த்த குடும்பத்தினர் கிருத்திகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.