பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடக்கடவுளே !! என்ன கொடுமை இது..! துணி காய வைக்கும் போது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!
திருநின்றவூர் அருகே கொடி கம்பியில் துணி காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு. பள்ளக்கழனி பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா - மேகலா தம்பதியினர்.
இந்நிலையில் மேகலா வழக்கம்போல் துணி காய வைப்பதற்காக மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். தற்போது மழை பெய்து வருவதால் மின்சார கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த மின் கம்பியானது கொடிக்கம்பியோடு உரசி கொண்டு இருந்திருக்கிறது.
இதனை அறியாத மேகலா கொடிக்கம்பத்தில் துணி காய வைத்த போதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். மேகலாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே ஓடி வந்து மேகலாவிற்கு முதலுதவி அளித்துள்ளனர்.
பின்பு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மேகலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.