அடேங்கப்பா! இந்த தீபாவளிக்கு எத்தனை கோடிக்கு மது விற்கப்பட்டது தெரியுமா? அசுர சாதனை.



Deepavali 2019 tasmac sales report

பொதுவாக பண்டிகை காலங்கள் என்றாலே சிறுவர்கள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் ஒரு மகிழ்ச்சி பொங்கும். அதிலும் தீபாவளி, பொங்கல் என்றால் சொல்லவே தேவை இல்லை. இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தீபாவளி என்றாலே புது உடை, இனிப்பு, மத்தாப்பு, பூஜை, புது படங்கள் என அந்த நாள் முழுவதும் வீடே மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். இது ஒருபுறம் இருக்க பண்டிகை நாட்கள் என்றால் மது அருந்திவிட்டு அதையும் ஒரு மகிழ்ச்சியாக பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Deepavali 2019

அந்த வகையில் தீபாவளி என்றாலே இத்தனை கோடிக்கு மது விற்பனை ஆனது, இத்தனை கோடி டார்கெட் என செய்திகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 25ஆம் தேதியன்று ரூ.100 கோடி, கடந்த 26ஆம் தேதியன்று ரூ.183 கோடி, தீபாவளி நாளான 27ஆம் தேதியன்று (நேற்று) ரூ.172 கோடி என ஆகமொத்தம் ரூ.455 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.