#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாலை ஓரத்தில் காரில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பல் மருத்துவர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சதுப்பு நிலத்தை ஒட்டி இரு புறங்களிலும் புதர்போல் செடிகள் வளர்ந்து இருக்கும். அப்பகுதியில், இரண்டுதினங்களுக்கு முன்பு இரவு 9 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதரை ஒட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. போலீசார் காரின் அருகே சென்று பார்த்தபோது, காரில் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் உல்லாசத்தில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீசாரை பார்த்ததும், காரில் இருந்த இளம்பெண் கீழே இறங்கி அவரது இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காரில் இருந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தபோது, தான் தி.மு.க. எம்.பி. ஒருவருக்கு நெருக்கமானவர் என்றும், காரில் ஒட்டி இருந்த எம்.பி.யின் கார் பாஸ் ஒன்றையும் அவரிடம் காட்டியுள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரின் விபரங்களை பெற்றுக்கொண்டு விசாரணைக்கு பிறகு அவரை அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த வாலிபர் கூறிய தி.மு.க. எம்.பி.யை தொடர்பு கொண்டு கார் பாஸ் குறித்து விசாரித்தபோது, தான் அதுபோல் யாருக்கும் கார் பாஸ் தரவில்லை என அந்த தி.மு.க. எம்.பி கூறியுள்ளார்.
இதனையடுத்து போலியான கார் பாசை வைத்து காரில் தப்பிச் சென்ற வாலிபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஷியாம் கண்ணன் என்பதும், அவர் பல் மருத்துவர் என்பதும் தெரியவந்தது. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் போலி எம்.பி. பாஸ் வைத்திருந்ததாகவும் அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.