#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓடும் இரயிலில் இறங்க முயற்சித்த காவலர் உடல் துண்டிக்கப்பட்டு பலி : தர்மபுரியில் நெஞ்சை உறையவைக்கும் பரிதாபம்.!
சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்த காவலர், இரயில் நிற்பதற்கு முன்னர் இறங்க முயற்சித்து தண்டவாளம் - இரயில் சக்கரம் இடையே சிக்கி உடல் துண்டித்து உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் ஈட்டியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வேலு (வயது 36). கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் தமிழ்நாடு ஆயுதப்படையில் காவலராக பணிக்கு சேர்ந்துள்ளார். சென்னையில் உள்ள ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றி வரும் வேலு, சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை அதிவிரைவு வண்டியில் இன்று தர்மபுரி நோக்கி பயணம் செய்தார்.
அந்த சமயத்தில், இரயில் மொரக்பூர் நிலையம் வந்ததும், நடைமேடையில் நிற்பதற்கு முன் திசையில் மெதுவாக நகரும் போதே கீழே இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது, கால் இடறி இரயில் தண்டவாளத்தில் வேலு விழுந்துவிட, அவரின் மீது ரயில் சக்கரங்கள் ஏறி இறங்கியுள்ளது.
நொடிப்பொழுதில் நடந்த சம்பவத்தில் காவலர் வேலு நிகழ்விடத்திலேயே உடல் துண்டிக்கப்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக ஸெளம் இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.