#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவனை இழந்து, வீடு இல்லாமல் 3 குழந்தைகளுடன் சுடுகாட்டில் வசிக்கும் பெண்.. நெஞ்சை உலுக்கும் கண்ணீர் சோகம்..!
வீடு இல்லாத பெண்மணி தனது 3 குழந்தைகளுடன் சுடுகாட்டில் வசித்து வரும் பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் வசித்து வந்தவர் ரபீக் (வயது 30). இவரின் மனைவி ரஜ்ஜியா பேகம் (வயது 28). தம்பதிகளுக்கு ஹப்சரி (வயது 10), ரிஜ்வானா (வயது 8), பர்சானா (வயது 6) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் ஊரடங்கு சமயத்தில் திருப்பூருக்கு கூலி வேலைக்கு சென்ற ரபீக் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, சொந்த ஊருக்கு வந்த ரபீக் உயிரிழக்கவே, ரஜ்ஜியா பேகம் தனது 3 குழந்தைகளுடன் பாப்பிரெட்டிபட்டியில் இருக்கும் தந்தை இம்ரான் கானின் இஸ்லாமியர் சுடுகாட்டுக்கு வந்து வசித்து வருகிறார். அவரின் தாய் - தந்தையும் மிகுந்த வறுமையில் உள்ளனர்.
சுடுகாட்டில் தங்கியிருக்கும் தம்பதிகள் வாழ வசதியோ, இடமோ இன்றி அண்டி பிழைத்து வருகின்றனர். மேலும், அவர்களுடன் ரஜ்ஜியா பேகம் மற்றும் 3 குழந்தைகள் வசித்து வருகிறார்கள், குழந்தைகளை கவனிக்க ரஜ்ஜியா கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
வீடே இல்லாத தங்களுக்கு அரசு பசுமை இல்ல வீடாவது ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. இனியாவது அரசு அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ரஜ்ஜியா மற்றும் அவரின் தாய் - தந்தை கோரிக்கை வைக்கின்றனர்.