பெண்ணிடம் மிருகத்தனமாக நடந்துகொண்ட திமுக முன்னாள் கவுன்சிலர்! கள்ளக்காதல் தான் காரணமா? வீடியோ உள்ளே



dmk counselor attacking a girl in beauty parlour

பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் ஒரு பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவியதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த மாதம் 18.8.18 அன்று நடந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா(35). இவருக்கும், வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் திமுக மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார்(52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

perambalur selvakumar

இந்நிலையில் அந்த அழகு நிலையத்தின் பெண் உரிமையாளர் சத்யாவை , திமுக பிரமுகர் செல்வகுமார் அழகு நிலையத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். அவர் ஒரு பெண் என்று கூட பாராமல் காலால் எட்டி எட்டி உதைத்துள்ளார்.  செல்வகுமார், சத்யாவை தாக்கிய சம்பவம் அழகு நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளதால் இந்த விவகாரம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படடுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து செல்வகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி, செல்வகுமாரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக திமுக பொது செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல் மூலம் இதற்கு கள்ளக்காதல் தான் காரணம் என்று தெரிகிறது. சத்யாவுக்கும் செல்வகுமாருக்கும் இடையே பல ஆண்டுகளாக  கள்ளக்காதல் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

perambalur selvakumar

பெர்மபலூர் பகுதியில் மயூரி என்ற பெயரில் 3 பெண்கள் அழகு நிலையங்களை நடத்தி வருகிறார் சத்யா. அவருடைய தொழில் வளர்ச்சியடைய உதவி செய்து உள்ளார் முன்னாள் திமுக மாவட்ட கவுல்சிலர்  செல்வகுமார். அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் செல்வகுமார் இருபது லட்ச ரூபாயை சத்யாவிற்கு கொடுத்து உதவி உள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு சத்யா செல்வகுமாருடன் இருந்த தொடர்பை துண்டித்துவிட்டு வேறுஒரு திமுக பிரமுகருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த செல்வகுமார் சத்யாவிடம் தான் கொடுத்த இருபது லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை திருப்பி தர சத்யா காலம் தாழ்த்தவே கோபமடைந்த செல்வகுமார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.