வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
மடிப்பாக்கத்தில் தி.மு.க. வட்ட செயலாளர் வெட்டிக்கொலை.! என்ன காரணம்.? திருச்சியில் 2 பேர் கைது.!
சென்னை மடிப்பாக்கம் 188-வது தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம். இவரது மனைவி மாநகராட்சி 188-வது வார்ட்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பேசி கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர் சாலையின் ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று செல்வதை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். ரத்தவெள்ளத்தில் சரிந்த செல்வதை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் செல்வம் கொலை வழக்கில் இன்று திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் காரில் வந்த ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.