#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மனிதநேயமிக்க மருத்துவரின் செயல்! குவிந்துவரும் பாராட்டுகள்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காமராஜர் சிலை வழியாக, நேற்று முன்தினம் டிப்பர் லாரியில் இருந்து ஜல்லி கற்கள் கீழே விழுந்து சாலையில் சிதறி கிடந்தன. ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அதிகப்படியான கற்கள் சாலையின் நடுவில் கொட்டி பரவி கிடந்ததால், அவ்வழியாக
இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். பலர் விழுந்து விபத்து ஏற்பட்டும் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் திரு.முத்தையா அவர்கள் சாலையில் சிதறி கிடந்த ஜல்லி கற்களை கூட்டி சாலையை சீரமைத்தார். அவர் அந்த சாலையின் அருகே கிளினிக்கையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சாலையின் ஓரங்களில் ஏராளமான கடைகள் உள்ளது. அப்பகுதியில் பிரபல தொழிலதிபரின் கடைகளும் உள்ளது. ஆனாலும் அங்கு சிதறிக்கிடந்த கற்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் முத்தையா அவர்கள் யாருடைய துணையும் இல்லாமல் தானாக முன்வந்து அந்த கற்களை அப்புறப்படுத்தினர். இதனை பார்த்த பொதுமக்கள் பலர் மருத்துவர் முத்தையா அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்