#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
+2 பயிலும் சிறுமி ஊர்ஊராக கடத்திச்சென்று பலாத்காரம்.. 53 வயதுடைய 2 மனைவிக்காரன் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்.!
17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட 53 வயது கேடுகெட்டவனின் செயல் பதறவைத்துள்ளது. சிறுமியை திட்டமிட்டு வீழ்த்தி சீரழித்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள திருவேற்காடு பகுதியில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த 22 ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்துகையில், திருவேற்காடு செல்லியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 2 பொண்டாட்டிக்காரன் நந்தகுமார் (வயது 53) என்பவனால் சிறுமி ஆசைவார்த்தை கூறி அழைத்து செல்லப்பட்டது உறுதியானது. மாணவி கைப்பட எழுதி வைக்கப்பட்டு இருந்த கடிதமும் உறவினரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இதற்கிடையில், 2 நாட்களுக்கு முன்னதாக சிறுமி வீட்டிற்கு வரவே, காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, நந்தகுமார் சிறுமியை அவ்வப்போது வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது. தற்போது மீண்டும் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்படவே, தலைமறைவான நந்தகுமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நந்தகுமாருக்கு 2 மனைவிகள், 4 மகன்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.