புத்தாண்டு அன்று குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து! காவல்துறை எச்சரிக்கை!



Driving license cancel if drunk and drive on new year

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகி கொண்டிருக்கிறது. வண்ண வண்ண விளக்குகள், வான வேடிக்கைகள், புது உடை, இனிப்பு, மகிழ்ச்சி என உலகமே புத்தாண்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் 2018 ஆம் ஆண்டு நிறைவடைந்து புது ஆண்டு 2019 பிறக்க உள்ளது. ஒவொரு வருடமும் புத்தாண்டு தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்களும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

Happy new year 2019

அந்தவகையில் இந்த வருடம் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க புது புது கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது காவல்துறை. அதில் குறிப்பாக புத்தாண்டு அன்று இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவது, குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது போன்ற விஷயங்களில் இந்த முறை காவல்துறையினர் அதிக கவனத்துடன் செயல்படுகின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று பைக் ரேஸ் நடத்த கூடாது என்று காவல் துறை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் புத்தாண்டு அன்று குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சற்றுமுன் காவல் துறை எச்சரித்துள்ளது.

Happy new year 2019

எனவே வாகன ஓட்டிகள் தயவு செய்து குடித்து விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும், வர இருக்கும் புத்தாண்டை பாதுகாப்புடனும், விபத்து இல்லாத புத்தாண்டாக கொண்டாட வேண்டியும் கேட்டுக்கொள்கிறோம்.