பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நான் யார் தெரியுமா.? ஒரு மணி நேரத்தில் தண்ணியில்லா காட்டிற்கு மாற்றிவிடுவேன்.! போலீசாரை மிரட்டிய போதை ஆசாமி.!
சென்னை புழல் ஜிஎன்டி சாலை சிக்னலில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்குன்றம் பாடியநல்லூர் பிள்ளையார் கோயிலை சேர்ந்த கார்த்திக் என்ற நபர் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்துள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், அவரது பைக்கை தடுத்து நிறுத்தி, ஏன் முக கவசம் அணியவில்லை என விசாரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி பெண் காவலரை ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை தனியாக அழைத்து உதவி ஆய்வாளர் மனோகரன் விசாரணை மேற்கொண்டதில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் வாகனத்திற்கான ஆவணங்களை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அவர் போலீசாரை மிரட்டும் விதத்தில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், என் மீது வழக்கு பதிவு செய்தால், கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள். வாகன சோதனையில் ஈடுபடும் நீங்கள் வெறும் காவலர்கள் தானே. நீங்கள் என்ன உயர் அதிகாரிகளா? நான் பிரபல ரவுடியின் கூட்டாளி. என் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது.
நான் இந்த வழக்கில் உள்ளே சென்றாலும் வெளியே வந்து உங்களை பழிவாங்குவேன். மேலும், தன்மீது வழக்குப் பதிவு செய்தால் ஒரு மணி நேரத்தில் காக்கி சீருடையை கழட்டி தண்ணியில்லா காட்டிற்கு மாற்றி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் கார்த்திக்கிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்து, அபராதம் செலுத்துவதற்கான ரசீதை கொடுத்து அந்த நபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் புழல் சிக்னலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.