பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மதுபோதையில் பள்ளி மாணவிகளை வழிமறித்து சில்மிஷம் செய்த இளைஞர்கள்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மது போதையில் வந்தாய் ஐந்து இளைஞர்கள் மாணவிகளை கண்டதும் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாணவிகளை வழிமறித்து அத்துமீற முயற்சித்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தனர். இதனிடையே அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் ஒரே ஒரு இளைஞர் மட்டும் அதிக மது போதையில் இருந்ததால் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.
அதன் பின்னர் பொதுமக்கள் அந்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட வாலிபரிடம் தப்பியோட மற்ற இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அந்த இளைஞர் நான் எனது நண்பருடன் பைக்கில் சென்ற போது மாணவிகளை கண்டதும் அவர்களை சகோதரி போல் நினைத்து பேச சென்றேன் அவர்கள் அனைவரும் எனது சகோதரிகளை என கதறி அழுத்தி பேசியுள்ளார்.