ஆளில்லா இடத்தில் திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்.. 2 பேர் கைது.!
சென்னை சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்தவர் திருநங்கை தயாளன். இவர் பார்ப்பதற்கு பெண் போலவே அலங்காரம் செய்து இளம்பெண் போல தோன்றுவார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து வருவோரிடம் பணம் கேட்டு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜாஜி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வெளியே வரும்போது எதிரில் வந்த திருநங்கையை உற்று பார்த்துள்ளனர். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட தகராறு திருநங்கை ராஜாஜியை திட்டிவிட்டு கன்னத்தில் அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி மற்றும் ராமச்சந்திரன் இருவரும் திருநங்கை பின் தொடர்ந்து மறைவான இடத்தில் வாயை பொத்தி கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.