பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வீட்டு தோட்டத்தில் பணத்தை பதுக்கியவர்கள் யாரென தெரியும்! திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது தனது தோட்டத்தில் பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென தனக்கு தெரியும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ஆம்பூர் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசுகையில், "என் வீட்டுத் தோட்டத்தில் பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென்று எனக்கு தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று துரைமுருகன் பேசினார்.
மேலும், என் வீட்டில் சோதனை செய்வதற்காக ஓய்வுபெற்ற அதிகாரிகளை நியமித்தது யார்? எனக் கேள்வி எழுப்பிய துரைமுருகன், என் மகனை லாரி ஏற்றி கொல்லச் சொன்னது யார்? என கண்ணீர் விட்டபடி பேசினார்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலின் போது வேலூரை தவிர இந்தியா முழுவதும் தேர்தல் நடந்து முடிந்தது. வேலூரில் மட்டும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.