மே 17 முதல் கட்டாயம்!! தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் நடைமுறை!! முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது தமிழக அரசு



e-pass-schema-starts-again-in-tamil-nadu

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,892 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 288 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இப்படி நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் மே 24 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்திருந்தது/

இந்நிலையில் நாளைமுதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், வரும் மே 17 முதல் இ -பாஸ் அவசியம் என்ற உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள வரும் 17 ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.