#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிபிஐ விசாரணையிலிருந்து விடுபட முதல்வருக்கு இருக்கும் சட்ட வழிகள்..! வெளியான பரபரப்பு தகவல்.!!
தமிழக முதல்வர் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்துள்ளதாக நடந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் சிபிஐ விசாரணையில் இருந்து விடுபட ஆளும் அதிமுக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கில் திமுக உட்பட அனைத்து தரப்பினரும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் நேற்று காங்கிரசின் முக்கிய தலைவர் ப சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றி ஆளும் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இதன் பின்னணியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இருக்குமோ என்று அரசியல் மற்றவர்களால் விமர்சகர்களால் விமர்ச்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசானது தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று வெகு நாட்களாகவே சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
சிபிஐ விசாரணையில் இருந்து தப்பிக்க முதல்வருக்கு இருக்கும் முதல் வாய்ப்பு என்னவென்றால் இன்று, உச்ச நீதிமன்றத்தை நாடி நீதிபதியை சந்தித்து சிபிஐ விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும். இன்றே தான் செய்ய வேண்டுமா என்றால் தசரா விடுமுறை முன்னிட்டு இனிமேல் உச்சநீதிமன்றமானது வரும் 22ம் தேதி தான் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளும்.
இரண்டாவதாக 22ம் தேதி தொடங்கும் நீதிமன்ற பணிகளுக்கு பிறகு நீதிபதிகளை சந்திப்பது அதுவும் இல்லையென்றால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சிபிஐ விசாரணைக்கு உட்படுவது. இதில் எந்த வழிமுறைகளை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பின்பற்ற போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.