மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.! ஆனால் மருத்துவர்கள் கொடுத்த அட்வைஸ்.!



edappadi palanisamy discharged from hospital

உடல்நிலை கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி  அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த பொது அவருக்கு குடலிறக்கம் (ஹெர்னியா) பிரச்னை இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினர். தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. 

edapadi

இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.