ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேமுதிக வேட்பாளரை பொறிவைத்து பிடித்த திமுக?.. உண்மை நிலவரம் என்ன?.. ஆனந்த் பரபரப்பு பேட்டி.!



Erode east election dmdk candidate jump into dmk

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையில், அவர் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், "நான் விஜயகாந்த் கட்சி தொடங்கிய நாளில் இருந்து அவருடன் தேமுதிகவில் பயணித்து வருகிறேன். கடந்த 2005ல் இருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கழகத்திற்காக உழைக்கிறேன். முன்னதாக கிளை செயலாளர் பொறுப்பு உட்பட பல பொறுப்புகளில் இருந்துள்ளேன்.

dmdk

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் என்மீது பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளார்கள். பெரிய கட்சிகளே இடைத்தேர்தலில் போட்டியிட தயக்கம் காண்பிக்கையில், தேமுதிக வேட்பாளராக என்னை அறிவித்தது. இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். எனது பெயரை அவபடுத்தும் விதத்தில் சிலர் செயல்படுகின்றனர்" என கூறினார்.