கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: சிலை திறப்பு விவரம் உள்ளே!



Events details on kalaingar first memorial day

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதி உடல் நல குறைவால் திமுக தலைவர் கருணாநிதி உயிர் இழந்தார். நாளை ஆகஸ்ட் 07 என்பதால் கலைஞர் இறந்த முதலாம் ஆண்டு நினைவுநாளை திமுக தொண்டர்கள் நாளை அனுசரிக்க உள்ளனர். இதற்காக பல்வேரு இடங்களில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அதில் குறிப்பாக நாளை அவரது நினைவு நாளை முன்னிட்டு அமைத்து பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

kalaingar dead

இதனை அடுத்து முரசொலி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மாண்புமிகு மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்வு ஆகஸ்ட் 7 அன்று மாலை 5 மணியளவில் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.