கஜா புயலின் போது செய்த தவறுகளை தற்போது செய்யவேண்டாம்.! மக்களே இதையெல்லாம் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.!



Everyone needs to be very careful and attentive because of the storm.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், பின்னர் அது புயலாக மாறி வருகிற புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24 ஆம் தேதி மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, ‘நிவர்’ என்று பெயரிடப்பட உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிவர் புயல் காரணமாக மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம் இது. புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம்.

strom

வங்க கடலில் புயல் உருவாகி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது அதன் காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் அரசாங்கமும் வானிலை ஆய்வு மையங்கள் கூறும் அறிவுரைகளை மிகவும் கவனத்துடன் பின்பற்றவேண்டும். புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.

 புயல் காரணமாக அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன், கவனத்துடனும் இருக்கவேண்டியது அவசியம். முன்னெச்சரிக்கையாக தங்களது வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்திருக்குமாறு தன்னார்வலர்களும் இணையத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். கஜா புயலின் போதும் வானிலை ஆய்வு மையம் இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்தது. எனவே கஜா புயலின் போது செய்த தவறுகளை நாம் ஆராய்ந்து பார்த்து இந்த புயலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.