தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அரசின் நிவாரண பால் பவுடரை சாப்பிட்டு வாந்தி, மயக்கம்! சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் போராட்டம்
புதுக்கோட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை சாப்பிட்ட ஏழு பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலின் தாக்கம் ஒரு மாதம் ஆகியும் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய வீடுகளையும், தோட்டங்களையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மஞ்சுவிடுதி என்ற கிராமத்தில் நேற்று நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. காலையில் வழங்கிய நிவாரணபொருட்களை சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே பாதிக்கப்பட்ட நபர்களில் 7 பேரை ஊர்மக்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்களின் அவசர சிகிச்சைக்கு கூட உதவ முடியாத கறம்பக்குடி அரசு மருத்துவமனை மீது அந்த கிராமத்து மக்கள் மிகுந்த கோபமடைந்தனர். இதனால், கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு பூட்டுப் போட்டு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசின் சார்பில் காலாவதியான ஆவின் பால்பவுடரை நிவாரணமாக வழங்கியதாகவும், அதனைத் தெரியாமல் சாப்பிட்டதால் தான் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த ஊர்மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கறம்பக்குடி போலீசார் தீவிர விசார ணை நடத்தி வருகின்றனர்.