#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புது ரூட்.. பக்கா ஸ்கெட்சுடன் களமிறங்கிய அன்னபூரணி.. இது அவுங்க மாடல் ல?..! கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
தனியார் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை என்ற விவாத நிகழ்ச்சிக்கு சென்று, கள்ளக்காதலன் தான் எனக்கு வேண்டும் என அடம்பிடித்து இரண்டாவதாக திருமணம் செய்து கரம்பிடித்தவர் அன்னபூரணி. இவரின் இரண்டாவது கணவர் அரசு.
கடந்த சில வருடத்திற்கு முன்னர் அன்னபூரணி தனது கணவரின் பெயரை தன்னுடன் இணைத்துக்கொண்டு, அன்னபூரணி அரசு அம்மாள் என்ற பெயரில் மக்களுக்கு ஆசி வழங்க தொடங்கினார். கடந்த மாதத்தின் போது செங்கல்பட்டில் இவர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதாக தெரியவந்து, அதற்கான காணொளிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை சந்தித்தார்.
மேலும், இணையவாசிகள் பலரும் அவரின் பழைய கள்ளக்காதல் சம்பவ வீடியோவை தேடி எடுத்து கலாய்த்து வர தொடங்கினார். இதனால் தன்னை பற்றி அவதூறு கூறும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் கொரோனா விதிமுறையை மீறி கூட்டம் நடத்துவதாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தொடங்கினர்.
பிரச்சனை பூதாகரமாக வெடித்து பல்வேறு சேனலுக்கு பேட்டியளித்த அன்னபூரணி, நான் கடவுள் இல்லை., சிலர் என்னை கடவுள் என்று கூறுகிறார்கள். அவர்களின் பிரச்சனையை சக்தியாக இருந்து தீர்த்து வைக்கிறேன் என மனதில் தோன்றியதை கூறி, ஆவேசத்துடன் ஓலமிட்டு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், அவர் அருள்வாக்கு சொல்வதாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் கலகலப்பை வழங்கி வைரலாகியுள்ளது.