#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாகன ஓட்டிகளே உஷார்.! நாளை முதல் இது கட்டாயம்.! மறந்துவிடாதீர்கள்.!
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
2021ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு, பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே பாஸ்டேக் வாங்குவதற்கு வாகன உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இதற்க்கு முன்னர் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேரடியாக பணம் செலுத்தும் முறை இருந்துவந்தது.
மத்திய அரசின் அறிவிப்பிற்கு பிறகு பணம் செலுத்துவது மற்றும் பாஸ்டேக் என்று இரு வழிகள் இருந்து வந்தது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், சுங்கச்சாவடிகளுக்கு அருகே வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பாஸ்டேக் பெறுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து நாளை முதல் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம். பாஸ்டேக் கணக்கிலிருந்தே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.