பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ச்சீ... இப்படியும் ஒரு தந்தையா? கேட்கவே மனசு பதறுது!! பாவம் அந்த பெண் குழந்தை..
பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் சித்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெல்டிங் பட்டறை தொழிலாளியான 36 வயதுடைய கதிரவன். இவருக்கு 9வது படிக்கும் 14 வயதுடைய மகள் இருக்கிறார்.
இந்த நிலையில், இவர் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். தனது தந்தை தனக்கு கொடுத்துவரும் பாலியல் தொல்லை குறித்து அந்த மாணவி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆசிரியர் கொடுத்த புகாரை அடுத்து கதிரவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை போச்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். பெற்ற மகளையே தந்தை பாலியல் கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.