#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை, மகன்! சிறுமியின் தோழி எடுத்த அதிர்ச்சி முடிவு!
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகன் சேர்ந்து 13 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புலிக்குட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் அவரது மகன் கிருஷ்ணன் ஆகிய இருவரும் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடையில் பொருள் வாங்க வந்த மனநிலை பாதிக்கப்பட்ட அதே ஊரை சேர்ந்த 13 வயது சிறுமியை தந்தை, மகன் இருவரும் வீட்டிற்குள் தனியாக அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளனர்.
அதனை பார்த்த சிறுமியின் தோழி, வீட்டின் கதவைத் தட்டினார். இதனையடுத்து சிறுமியை மீட்ட தோழி, நடந்த சம்பவத்தை சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் மற்றும் அப்பகுதி மக்களும் ஒன்று திரண்டு விசாரித்து போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியானது.
இதையடுத்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தந்தை வெங்கடாச்சலம், மகன் கிருஷ்ணன் இருவரையும் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.