தனது மகளுக்காக இப்படியா? தந்தை செய்த காரியத்தால், அதிர்ச்சியில் துடிதுடித்து போன குடும்பத்தினர்.!



father commit suicide for daughter

மதுரையை சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவருக்கு பாத்திமா பீவி என்ற மகள் உள்ளார். சையது தனது மகள் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார்.இந்நிலையில் பாத்திமாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அதை தொடர்ந்து அவர் தனது பெற்றோரை பிரிந்து தனது கணவரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் மகளின் பிரிவை தாங்க முடியாமல், சையது மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் எப்பொழுதும் அவள் யாபகமாகவே இருக்க, தனது மகளை நினைத்து அழுது கொண்டே இருந்துள்ளார். இவ்வாறு மகளின் பிரிவு நாளுக்கு நாள் பெரும் கஷ்டத்தை தந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

suicide

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்த செய்துவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.அதனால் அவளது குடும்பத்தினர் மற்றும் மகள் கதறி அழுதுள்ளனர்.

 மேலும் தனது மகளின் பிரிவை தாங்க முடியாமல் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் இதுகுறித்து போலீசார் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.