பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தந்தையின் நினைவாக இருந்த பைக் காணாமல் போனதால் மனமுடைந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு..!
சென்னை புரசைவாக்கம் தாண்டவராயன் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் என்ற இளைஞர். இவர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜனுக்கு உயர் ரக R15 என்ற பைக்கை வாங்க வேண்டும் என்ற ஆசையில் தனது தந்தையிடம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மகனின் ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ₹1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு பைக்கை தியாகராஜனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். அதனை அடுத்து சில நாட்களிலேயே தியாகராஜனின் தந்தை இறந்துள்ளார்.
இதனால் சோகத்தில் இருந்த தியாகராஜன் தந்தையின் நினைவாக இருந்த பைக்கை பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் வழக்கம் போல் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை வீட்டு வாசலில் இருந்த பைக் காணாமல் போகவே பதறிய தியாகராஜன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் தற்போது நிலவி வரும் ஊரடங்கால் பைக்கை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சற்று தாமதம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தியாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.